Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

Siva
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (08:15 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி விதித்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சீனாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தியாவுக்கான சீனத் தூதர் தனது சமூக வலைதளத்தில், "மற்ற நாடுகளை அடக்குவதற்கு வர்த்தக வரியை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுகிறது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார். 
 
அமெரிக்கா தனது இந்த வரி விதிப்பை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சீனா எச்சரித்துள்ளது. 
 
இந்தியப் பிரதமர் மோடி விரைவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவை கண்டித்து சீனா வெளியிட்டிருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments