அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25% மற்றும் பின்னர் அதை 50% ஆக உயர்த்தி வரி விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க வேளாண் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டால், அது அமெரிக்காவின் வணிகத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். ஆனால், டிரம்ப்பின் வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக என்ன விலையை கொடுக்க வேண்டியிருந்தாலும், அதை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறியது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்த அதிரடி அறிவிப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.