Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

Advertiesment
Death

Prasanth Karthick

, திங்கள், 19 மே 2025 (11:07 IST)

ஆந்திராவில் குழந்தைகள் காருக்குள் சென்று விளையாடியபோது கார் கதவு மூடியதில் குழந்தைகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள துவாரபுடி பகுதியில் உள்ள மகளிர் மன்ற அலுவலகம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அங்கு அலுவலகத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் ஒருபக்க கதவு சரியாக மூடாமல் இருந்துள்ளது.

 

சிறுவர்கள் விளையாட்டாக காருக்குள் ஏறியபோது கதவு லாக் ஆகியுள்ளது. ஜன்னல்களும் மூடப்பட்டிருந்ததால் சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பயத்தில் அழுத குழந்தைகள் கார் கதவை திறக்க எவ்வளவோ முயன்றுள்ளனர். ஆனால் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த அவர்கள் காரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

இதற்கிடையே குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் எங்கெல்லாமோ தேடிக் கொண்டிருந்த நிலையில், அலுவலக ஊழியர் ஒருவர் காருக்குள் குழந்தைகள் மயங்கி கிடப்பதை பார்த்து உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், குழந்தைகள் உடலைக் கண்டு பெற்றோர்கள் கதறி அழுதக் காட்சி பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!