Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

Advertiesment
tirupathi

Mahendran

, திங்கள், 19 மே 2025 (10:07 IST)
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்க, ரூ. 500 கோடி செலவில் 1.54 லட்சம் சதுரஅடியில் 10 மாடிகள் கொண்ட மிக நவீனமான பஸ் நிலையம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புது பஸ் நிலையம் அமைப்பதற்காக ஆந்திர மாநில அரசின் போக்குவரத்து துறைக்கு தேவையான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
திருப்பதியில் தற்போதைய பஸ் நிலையத்தில் மூன்று பக்கங்களில் சாலைகள் இருப்பதை போல, புதிய நிலையம் நான்கு பக்கங்களில் சாலைகள் கொண்டதாக வடிவமைக்கப்படும். முதல் மாடியில் 98 நடைமேடைகள் பஸ்களுக்கு நிறுத்த இடமாகும். இரண்டாம் மாடியில் கார்கள் மற்றும் பைக்குகளுக்கான நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மின்சார பஸ்கள் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
மூன்றாம் மாடியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் அமைக்கப்படும். மேலும், மின் மேலாண்மை அலுவலகம் மற்றும் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையும் உண்டு. நான்காம் முதல் ஏழாம் மாடி வரை வணிக வளாகங்கள் இருக்கும் போது, எட்டாம் முதல் பத்தாம் மாடி வரை வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. பத்து மாடியில் ஹெலிகாப்டர்களுக்கான ஹெலிபேட் கட்டும் திட்டமும் உள்ளது.
 
புதிய பஸ் நிலைய கட்டுமானம் தொடங்கியவுடன், மூன்று இடங்களில் இருந்து பஸ் நிலையங்கள் தற்காலிகமாக மாற்றப்பட உள்ளன. ரயில்வே நிலையத்திலிருந்து நேரடியாக புதிய பஸ் நிலையம் செல்ல, ஸ்கைவாக் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் தெரிவிக்கையில், புதிய பஸ் நிலையம் திருப்பதி கோவிலை போல அழகிய வடிவத்தில் உருவாக்கப்படும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?