தமிழகத்தில் சில ஆண்டுகளாக பெண்களுக்கு இலவச பேருந்து சேவை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற சேவையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதே ஆகும். அந்த வாக்குறுதியை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று முதல் அமல்படுத்த இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 11,216 பேருந்துகளில், ஆகஸ்ட் 15 முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதேபோல் தற்போது ஆந்திராவிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.