சத்தீஸ்கரில் உள்ள உணவகம் ஒன்றில், வெஜ் பிரியாணியில் எலும்பு துண்டை போட்டு, உணவுக்கான பணத்தை செலுத்த மறுத்த இளைஞர்கள் குழுவின் மோசடி, சிசிடிவி காட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.
புனே அருகே உள்ள 'பிரியாணி பே' என்ற உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. சுமார் 8 முதல் 10 இளைஞர்கள் கொண்ட ஒரு குழு, அந்த உணவகத்திற்கு சென்று வெஜ் மற்றும் நான்-வெஜ் பிரியாணிகளை ஆர்டர் செய்தது.
சிறிது நேரத்தில், அவர்களில் ஒருவர் தனது வெஜ் பிரியாணியில் எலும்புத்துண்டு இருப்பதாகவும், எனவே பில் செலுத்த முடியாது என்றும் சண்டையிட தொடங்கினார். இது குறித்து உணவக மேலாளர் போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தி, சிசிடிவி காட்சிகளைப் பார்க்க சொன்னார்கள். அப்போதுதான் உண்மை வெளிவந்தது.
சிசிடிவி காட்சியில், இளைஞர்களில் ஒருவர் மற்றொருவரிடம் எலும்புத் துண்டை கொடுத்து, அதை வெஜ் பிரியாணி தட்டில் போடுவது தெளிவாக தெரிந்தது. அவர்கள் சுமார் 5,000 முதல் 6,000 ரூபாய் வரையிலான பில்லை தவிர்க்கவே இப்படி செய்தனர்" என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கும்பல் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.