ரூபாய் 1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியதாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கடன் மோசடி வழக்கில் இன்று டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ரூபாய் 1000 கோடி கடன் கடன் வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் சீனிவாசன் என்பதும் 2018 முதல் தலைமுறைவாக இருந்த அவரை காவல் துறையை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இதே போல் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது