தெலங்கானாவில் மே 29 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு (மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 14) கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மே 3 ஆம் தேதியுடன் முடிய இருந்த நிலையில் மேலும் இருவாரங்களுக்கு (மே 17) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதிப்புகள் குறையாமல் இருப்பதால் மேலும் இரண்டு வாரங்கள் மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த இரண்டாம் கட்ட ஊரடங்கின்போதே தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, பொது முடக்கத்தை மே 29 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்போது ஊரடங்கை நீக்கினால் ஆபத்தை அகற்ற முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோலவே அம்மாநிலத்தில் உள்ள சிவப்பு மண்டலங்களில் எவ்வித தளர்வும் இல்லை என அறிவித்துள்ளார்.