இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

Siva
வியாழன், 6 நவம்பர் 2025 (11:03 IST)
பீகாரில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள், புர்கா அணிந்து வரும் வாக்காளர்கள் மீது சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
அவர்  "சந்தேகத்திற்குரிய புர்கா அணிந்த வாக்காளர்கள் கண்டிப்பாக சோதிக்கப்படுவார்கள்; அதற்கென அதிகாரிகள் கண்காணிக்க காத்திருப்பார்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
 
மேலும் "பீகாரில் ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது, இது பீகார், பாகிஸ்தான் அல்ல" என்று அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
 
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தனது அரசியல் உரைகளில் இதுபோன்ற கருத்துகளை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது வழக்கம். இதற்கு முன்னரும் பல தேர்தல் காலங்களில் இவர் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
 
இந்த முறை அவர் வெளியிட்ட "இது பாகிஸ்தான் அல்ல" என்ற கருத்து, எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
 
எதிர்க்கட்சிகள் இந்த கருத்துக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து, தேர்தல் விதிகளை மீறும் வகையில் அவர் பேசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காகித கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்.. ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.. விஜய் குறித்து வைகோ

சென்னையில் பைக் பந்தயத்தால் நேர்ந்த சோகம்: மெதுவாக சென்றும் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

மீண்டும் உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

வரதராஜ பெருமாள் கோவில் ‘தங்க பல்லி’ மாயம்? பரபரப்பு புகார்! - போலீஸ் விசாரணை!

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments