2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை பொருப்பு நிதி அமைச்சர் புயூஸ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் தாக்கல் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
பட்ஜெட் தாக்கலுக்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் பட்ஜெட்டின் 11 அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அம்சங்கள் நிச்சயம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் உள்ளதா என்பது தெரியவில்லை.
தற்போது நாடளுமன்றம் கூடி பொருப்பு நிதி அமைச்சர் தனது உரையை துவங்கியுள்ள நிலையில் எதிர்கட்சி இப்போதே அமலியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பியூஷ் கோயல் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் மோடி அரசின் பெருமைகளை பேசி வருகிறார்.
இந்நிலையில் பட்ஜெட்டின் சில அம்சங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே ஊடகங்களுக்கு லீக்கானதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி குற்றச்சாட்டியுள்ளார். லீக்காகியுள்ள 11 பட்ஜெட் அம்சங்களையும் அவர் புகைப்படமாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.