நாடளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளது. அதேபோல் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை பொருப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் தாக்கல் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இந்நிலையில், தெர்மாகோல் நாயகன் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு ஸ்டாலினு ஒரு கேள்வியை கேட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 24 வது பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற போது அவர் பேசியது பின்வருமாறு, தனக்கு செல்வாக்கு கூடி இருப்பதாக கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து நிற்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்காக எந்த ஒரு கட்சியும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அதிமுக கட்சி, ஜெட் வேகத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அந்த ஜெட் இப்போ எங்க போயிக்கிட்டு இருக்கோ...?