ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்னர் அல்வா கிண்டுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதற்காக அல்வா தயாரிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் அல்வா கிண்டுவதை பழங்கால நடைமுறையால பின்பற்றி வருகின்றனர். பணியாளர்களை உற்சாக படுத்தவே அல்வா தயாரித்து வழங்கப்படுகிறது.
பட்ஜெட் பேப்பர்களை பிரிண்ட் செய்யும் நடைமுறைகளில் மிக முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு அலுவலகரும், பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை நிதி அமைச்சகத்திலேயேதான் தங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே அல்வா கிண்டப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நடந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.