டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால்அங்கு தங்கியிருந்த பிரமுகர்கள் அவசர அவசரமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் "வைகை பொதிகை" என்ற பெயரில் தமிழ்நாடு இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழகத்திலிருந்து செல்லும் பிரமுகர்கள் தங்குவார்கள்.
இந்த நிலையில், இன்று திடீரென தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, தமிழ்நாடு இல்லத்திலிருந்து பிரமுகர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மோப்பநாய் உதவியுடன், போலீசார் தமிழ்நாடு இல்லம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவிதமான ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அடுத்து, இது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? அந்த ஈமெயிலை அனுப்பியது யார்? என்பதற்கான தகவலைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.