கடந்த இரண்டு மாதங்களாக, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று முதல், அதாவது மார்ச் 1ஆம் தேதி முதல், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹1965 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு சிலிண்டருக்கு ₹5.50 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதன் விலை ₹818.50 என தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், பெரிய அளவில் அதிகரிக்காததால் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால், வருங்காலத்தில் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.