Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்.. தமிழில் வாழ்த்து கடிதம் எழுதிய ஆளுனர் ரவி..!

Advertiesment
cm governor

Mahendran

, சனி, 1 மார்ச் 2025 (09:35 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி தமிழில் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இந்தியா முழுவதிலும் இருந்து பல அரசியல் பிரபலங்களும் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
 
"தாங்கள் இன்று தங்களுடைய 72வது பிறந்த நாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் நன்மையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
 
இந்த கடிதத்தில் ஆர். என். ரவி  எனதமிழில் கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைக்க உறுதியேற்போம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி