தமிழகத்தில் ஏற்கனவே 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
நாளை, அதாவது மார்ச் 1ம் தேதி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில், மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை தமிழக முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.