ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 40 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. 40 பயணிகளுடன் அந்த படகு தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி வந்தனர். படகில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 33 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள 33 பேரை தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில் 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியானது இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.