Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரம்பலூர் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

Advertiesment
பெரம்பலூர் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
, வெள்ளி, 11 மே 2018 (11:08 IST)
பெரம்பலூர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9பேர் பலியாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன்(36) என்பவர் தனதுமனைவி லெட்சுமி(32), மகள்கள் பவித்ரா(14), நிவேதா(8), மகன்வரதராஜன்(5), மற்றும் உறவினர்கள் முரளி(55),மேகலா(19), நாரயணன்(40), பூபதி(23), ஆகிய 9 பேரும் காரில் காஞ்சிபுரத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில்  பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி சாலைத் தடுப்பின் மீது மோதி, எதிரே வந்த மோகன் காரின் மீது மோதியது. இந்த விபத்தில் மோகன் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
webdunia
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தை ஏற்படுத்திய காரிலிருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 9  பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெரம்பலூர்போலீசார் வழக்கு பதிந்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு