Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்

Advertiesment
13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்
, சனி, 12 மே 2018 (13:05 IST)
ஆந்திராவில் 23 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்தவர் அய்யம்மாள்(23). இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த உறவுக்காரப் பையனான 13 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவர்களது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
 
அதன்படி பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த செய்தியானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. மைனர் பையனுக்கு திருமணம் செய்து வித்தது தவறு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதனையடுத்து இருவரது பெற்றோர்களும் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு...