செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

Siva
செவ்வாய், 18 நவம்பர் 2025 (17:25 IST)
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில்,  தீவிரவாதக் குழுவினர் குறியீட்டு வார்த்தைகளை பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் செயலியில் உரையாடல்களை பரிமாற, உணவுப்பெயர்களை பயன்படுத்தியுள்ளனர். அதில் 'பிரியாணி' என்பது வெடிமருந்துகளுக்கான குறியீடு என்றும், விருந்து என்பது தாக்குதல் நாளுக்கான குறியீடு என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. "பிரியாணி தயாராக உள்ளது... விருந்துக்கு தயாராகுங்கள்" என்றால், குண்டு தயார், தாக்குதல் உடனடியாக நடக்கவிருக்கிறது என்று அர்த்தம்.
 
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மையமாக இருக்கும் ஃபரிதாபாத் அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் தொடர்பான 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
சேதம்: நவம்பர் 10 அன்று நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் புலனாய்வு நிறுவனம் (NIA) தற்கொலை குண்டுதாரி டாக்டர் உமர் நபியின் இரு நெருங்கிய கூட்டாளிகளை இதுவரை கைது செய்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments