Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் இரவில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்.. காரணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த கிராமத்து மக்கள்..!

Advertiesment
தினமும் இரவில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்.. காரணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த கிராமத்து மக்கள்..!
, திங்கள், 24 ஜூலை 2023 (09:43 IST)
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் இரவில் மின்சாரத்தை துண்டித்ததை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து உள்ளார். இருவரும் இரவில் சந்திப்பதற்கு திட்டமிட்ட நிலையில் தினமும் கிராமத்தின் மின் இணைப்பை துண்டித்து விட்டு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த காதலரை சந்தித்துள்ளதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கிராமத்தினர்  கிராமத்தை சுற்றி வந்த போது இளம் பெண்ணும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
 
உடனே சுற்றி வளைத்து அவர்களை விசாரித்த நிலையில் அவர்கள் இருவரும் உண்மையாகவே காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அந்த கிராமத்தில் இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே சரிந்த பங்குச்சந்தை.. மீண்டும் ஏற்றம் காணுமா?