Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்புக்காக மணிப்பூர் சென்றுவிடாதீர்கள்...மணிப்பூர் விவகாரம் பற்றி இயக்குனர் அமீர் கருத்து

Advertiesment
Ultimate Star
, சனி, 22 ஜூலை 2023 (19:34 IST)
மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வன்முறைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும்  நிலையில்,  இயக்குனர் அமீர் முன்னணி நடிகர்களை விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை   நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற  வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு கருத்துகள் கூறி வருகின்றனர்.

இந்த இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை மணிப்பூர் மாநில போலீஸார் வெளியிட்டனர். அதன்பின்னர்,’’ மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 11 நாட்கள் போலீஸார் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக’’ போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பற்றி இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  ‘’எங்கே போனார்கள் அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன், மக்கள் செல்வன், சீயான், நற்பணி நாயகன், சின்ன ரஜினி, மறந்தும்கூட உங்கள் குடும்பத்தாருடன் படப்பிடிப்புக்காக மணிப்பூர் மாநிலம் சென்றுவிடாதீர்கள் இதுவே என் எச்சரிக்கை’’ என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி