பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பாட்னாவில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் கருவூலம், அமைச்சரவை கூடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சென்று பார்வையிட்டார்.
ஆய்வின்போது அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை குறிப்புகளை வழங்கிய நிதீஷ், ஊழியர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அலுவலகங்களில் சுத்தத்தை பேண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
முதலமைச்சருடன் முதன்மை செயலாளர் தீபக் குமார், தலைமை செயலாளர் பிரத்யாய் அமிர்த், வளர்ச்சி ஆணையர் டாக்டர் எஸ். சித்தார்த், பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. ராஜேந்திரா மற்றும் முதலமைச்சரின் செயலாளர் அனுபம்குமார் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளும் ஆய்வில் உடனிருந்தனர்.