பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி.. 13 தொகுதிகளில் மட்டும் காங். முன்னிலை..!

Siva
வெள்ளி, 14 நவம்பர் 2025 (09:46 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பம் முதலே பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது, ஆட்சி அமைக்க தேவையான இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி , மொத்தமாக 155 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதில், பா.ஜ.க. தனியாக 74 தொகுதிகளிலும், நிதிஷ் குமார் கட்சி 69 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
 
அதேபோல், எதிர்க்கட்சிக் கூட்டணியான ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் கூட்டணி 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் ஆர்.ஜே.டி. 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பீகாரில் ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் இருந்தால் போதும் என்ற நிலையில், தற்போது 154 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதால், இந்த முன்னிலை தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலே மீண்டும் ஆட்சி அமைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments