Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

Advertiesment
toilet

Mahendran

, வெள்ளி, 23 மே 2025 (10:57 IST)
பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வால் ஏற்கனவே பயணிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 12 மெட்ரோ நிலையங்களில் பொதுக்கழிப்பறைகளுக்கு கட்டணம் பெறும் முறையை BMRCL அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மெட்ரோ நிலையங்களின் பொது பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் ‘சுலப் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை சிறுநீர் கழிக்க ரூ. 2 மற்றும் ரூ.5 கழிப்பறை  என கட்டணமாக பெறப்படுகிறது.
 
இந்த மாற்றம் நேஷனல் காலேஜ், ஜெயநகர், பனசங்கரி, கபன் பார்க் உள்ளிட்ட முக்கிய நிலையங்களை உள்ளடக்கியது. மெட்ரோ கார்டு/டோக்கன் மூலம் அணுகும் கட்டண பகுதிக்குள் உள்ள கழிப்பறைகள் மட்டுமே பயணிகளுக்கு இலவசமாக இருக்கும் என BMRCL விளக்கம் அளித்துள்ளது.
 
இந்த கட்டணத்திற்கும் மெட்ரோ பயண கட்டண உயர்வுக்கும் தொடர்பில்லை என்றும், கழிப்பறை பராமரிப்பை மேம்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.
 
இதேவேளை, பயணிகள் மற்றும் BMRCL ஊழியர் சங்கம் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளனர். “நிர்வாகம் பெரும் தொகைகளை வீணாக்குகிறது. கழிப்பறைக்கு கட்டணம் விதிப்பதற்கு பதிலாக, உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும்” என துணைத் தலைவர் சூர்யநாராயண மூர்த்தி குற்றம்சாட்டினார்.
 
இது பொதுமக்களிடையே மேலும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!