பெங்களூருவின் நம்ம மெட்ரோ ரயிலுக்குள் ஒரு நபர் பிச்சை கேட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கருப்பு சட்டை அணிந்த அந்த நபர், ஓடும் ரயிலின் கடைசி பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பணம் கேட்டது 34 வினாடி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் மந்திரி சதுக்கம் சம்பிகே சாலை மற்றும் ஸ்ரீராமபுரா நிலையங்களுக்கு இடையே நடந்தது.
மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்தில் காலை 11.04 மணியளவில் ரயிலில் ஏறிய அந்த நபர், காவல்துறையினர் வந்த பின்னரே பிச்சை கேட்பதை நிறுத்தினார். அவர் பின்னர் தசரஹள்ளி மெட்ரோ நிலையத்தில் இறக்கிவிடப்பட்டார்.
மெட்ரோ ரயில்வே சட்டத்தின் பிரிவு 59-ன் கீழ், மெட்ரோ நிலையங்களிலும் ரயில்களிலும் பிச்சை கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமீறல் சம்பவம், மெட்ரோ பயணிகளிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.