Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளுக்கு நாள் ஆபத்தாக மாறும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு! இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்!

Prasanth K
வெள்ளி, 20 ஜூன் 2025 (15:25 IST)

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியே அதேசமயம், இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து என நிபுணர்கள் பலர் எச்சரிக்கின்றன.

 

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை கையாளவும், நிர்வகிக்கவும், விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து துறை செயல்படுகிறது. ஆனால் விமானப் போக்குவரத்திற்கான அமைப்புகளிலும், அதற்கான முதலீட்டிலும் பெரும் பற்றாக்குறை நிலவுவதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 

இந்தியாவில் மக்களிடையே அதிகரித்து வரும் விமானப் பயணங்கள் காரணமாக இந்தியாவில் அமைக்கப்பட வேண்டியுள்ள கூடுதல் விமான நிலையங்கள், விமானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்பட்டுள்ள சரிவை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இந்திய விமான சேவையில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் விமானிகளுக்கான தேவை உள்ள நிலையில் 300 விமானிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறையை மேற்கொள்ளும் DGCA-வில் 48 சதவீத ஆள் பற்றாக்குறை உள்ளதாகவும், AAI-ல் 36 சதவீதமும், ATCO-வில் 30 சதவீதமும் ஆள் பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான பட்ஜெட் கடந்த 2 ஆண்டுகளில் 23 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மூலதன செலவை 91 சதவீதம் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இந்திய விமானப் போக்குவரத்துக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments