Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

Advertiesment
ஜேமி ரே மீக்

Siva

, வியாழன், 12 ஜூன் 2025 (17:36 IST)
அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 53 பிரிட்டிஷ் நபர்களில் ஒருவர் ஜேமி ரே மீக். புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். தற்போது அது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
 
அந்த வீடியோவில், அகமதாபாத் விமான நிலையத்தில் சந்தோஷமாக சிரித்தபடி ஜேமி கூறுகிறார்: “விமான நிலையத்தில் இருக்கிறோம்… லண்டன் திரும்ப 10 மணி நேர பயணம்… பை பை இந்தியா!” என பதிவு செய்துள்ளார்.
 
அவரது பக்கத்தில் இருந்தவர் “நாம் வாழ்க்கையில் பொறுமை இழக்க கூடாது என்பது தான் எனக்கு மிக முக்கியமான பாடமாக இருக்கு…” என்றும், “மகிழ்ச்சியாக… அமைதியாக… திரும்பி போறேன்…” என்றும் சொல்லி சிரித்துள்ளார்.
 
ஜேமி மீக் ஏர் இந்தியா AI171 விமானத்தில் இருந்தார். இது அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமாகும். விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் 1 கனடியர் உள்ளனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி, “இந்த விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையானது,” என தெரிவித்து, “இந்த துயர தருணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு என் ஆழ்ந்த அனுதாபம்,” என்றார். மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளில் நேரில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!