Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே.. முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை..!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (13:46 IST)
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
 
மக்கள் நலனுக்காகத் திட்டங்களை செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காக செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம். 
 
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளை சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.
 
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments