Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் உண்மையான மகன் மறைந்துவிட்டார்.. டாடா மறைவு குறித்து ஏஆர் ரஹ்மான்..!

Advertiesment
tata

Mahendran

, வியாழன், 10 அக்டோபர் 2024 (12:11 IST)
தொழிலதிபர் ரத்தன் டாடா இன்று காலமான நிலையில், இசை புயல் ஏ.ஆர். ரகுமான், "இந்தியாவின் உண்மையான மகன் மறைந்துவிட்டார்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

சில மனிதர்கள் தலைமை, பண்பு, வெற்றி, மரபுகளை கற்றுத் தரும் புத்தகங்களாகவே இருந்துள்ளனர். மிக அற்புதமானவர்கள், எளிதில் அணுகக்கூடியவர்கள், நம்மை ஊக்குவித்து வழிநடத்துபவர்கள். இந்தியா தனது உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துள்ளது" என்று  பதிவு செய்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முரசொலி மாறன் சகோதரர் முரசொலி செல்வம் காலமானார்: திமுக தொண்டர்கள் அஞ்சலி..!