Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

Advertiesment
கள்ளக்காதல்

Siva

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (08:09 IST)
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், கள்ளக்காதலன் ஒருவன் தனது கள்ளக்காதலி மற்றும் அவரது இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கான காரணம், தங்க முலாம் பூசப்பட்ட வாஷிங் மெஷின் வாங்கி தர வேண்டும் என்று கள்ளக்காதலி கேட்டதுதான் என்று கூறப்படுகிறது.
 
காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்த மாதுரி மற்றும் தன்பிரசாந்த் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், மாதுரிக்கு சுரேஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்தது. கணவர் வீட்டில் இல்லாதபோது சுரேஷ் அடிக்கடி மாதுரியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். 
 
மாதுரிக்காக ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவு செய்திருந்த சுரேஷ், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, மாதுரி அவரிடம் ஒரு தங்க முலாம் பூசிய வாஷிங் மெஷின் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். 
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த சுரேஷ், மாதுரி மற்றும் அவரது இரண்டு மகள்களையும் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாக இருந்த சுரேஷை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?