ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எம்.எல்.ஏ ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவில் தம்ரிகுண்டா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரோடு இருந்த முன்னாள் சிவேரி சோமாவும் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் படுகாயமாடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.