Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டேட் பர்ஸ்ட் மாணவி பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகளை அலேக்காக தூக்கிய போலீஸார்

ஸ்டேட் பர்ஸ்ட் மாணவி பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகளை அலேக்காக தூக்கிய போலீஸார்
, ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (12:42 IST)
ஹரியானா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 அயோக்கியன்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
ஹரியானாவில் சிபிஎஸ்இ தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று பிரதமர் மோடியிடம் விருது வாங்கிய 19 வயதுப் பெண்ணை கடந்த 12-ஆம் தேதி ஒரு அயோக்கிய கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து மாணவியை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.
 
இந்த சம்பவம் இந்தியாவையே புரட்டிப்போட்டது. போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு தனிப்படைகளை அமைத்தனர். 
 
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்களில் 3 பேரின் விவரங்களை கூறினார். போலீஸார் அந்த 3 அய்யோக்கியன்களின் போட்டோக்களை வெளியிட்டனர். இவர்களைப் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என  அறிவித்திருந்தனர். அந்த 3 பேரில் ஒருவன் ராணுவ அதிகாரி ஆவான்.
 
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அந்த 3 அயோக்கியன்களையும் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
 
இந்த கயவர்களை விசாரணை என்ற பெயரில் ஜாலியாக உலாவ விடுவதற்கு பதில் உடனடியாக கொலை செய்ய வேண்டும் என்பதே மக்கள் பலரின் கருத்தாக உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரோ டப்பிங் பேசிட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதான? - தெறிக்கும் மீம்ஸ்