Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாக்கி உலக கோப்பை ஏ,ஆர்.ரஹ்மான் இசை: குல்சார் பாடல்வரிகள்

ஹாக்கி உலக கோப்பை ஏ,ஆர்.ரஹ்மான் இசை: குல்சார் பாடல்வரிகள்
, சனி, 22 செப்டம்பர் 2018 (19:18 IST)
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வரும் 28ஆம் தேதி ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள்  தொடங்குகிறது.


இதற்கான டைட்டில் பாடலை பிரபல பாடலாசிரியரான குல்சார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் பாடல் வரிகள் ஜெய்ஹிந்த், ஹெய் இந்தியா என பாடல் ஆரம்பிக்கிறது. பாரதத்தின் மேன்மையும் காலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் குல்ஸார் பாடல் வரிகளை எழுதியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நம் நாட்டில் உலக கோப்பை ஹாக்கிபோட்டிகள் நடப்பது  மிகப்பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.உலக கோப்பை போட்டிக்கான குல்சாரின் பாடல் வரிகளும் எனது இசையும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

உலகில் நடக்கும் எல்லா விளையாட்டு தொடர்களிலும் இந்த ஹாக்கி தொடர்தான் சிறந்தது என்பதில் சந்தேகமேயில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம்.ஹாக்கி கொண்டாட்டத்தில் என்னுடன் இணைந்திருங்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் பாடலாசிரியர் குல்சார் எழுத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலகக் கோப்பைக்கான பாடலை இசையமைத்துப் பாடுகிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். துவக்க விழா நேரடி நிகழ்ச்சியின் போது ரஹ்மான் பங்கேற்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை இந்தியா 3ஆவது முறையாக நடத்துகிறது. முன்னதாக 1982ஆம் ஆண்டு மும்பையிலும், 2010ஆம் ஆண்டு டெல்லியிலும் நடைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும், கழகமும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்