இந்தக் கால இளைஞர்கள் பெரும்பாலும் பைக் சாகசத்தை விரும்புவர். அதிலும், பைக் ரைடிங்கின்போது ஸ்டண்ட்ஸ் செய்து அதை வீடியோ பதிவு செய்வதை பெருமையாகப் கருதுவர்.
இந்நிலையில், ஒரு முதியவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ஒருக்களித்து உட்கார்த்துகொண்டு, ஹேண்ட்பாரில் இருந்து கையை எடுத்து, சீட்டில் படுத்தும், ஆடிக் கொண்டு, எழுந்து நின்று கொண்டு, சென்ற வீடியோ இன்று சமூ,க வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஆனால், இதுபோன்ற செயல்கள் பெரும் அபாயத்திற்கு வழிவகுப்பதாகவும், இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரன அமைவதாகவும் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.