Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணுக்காக அடித்துக் கொண்ட இளைஞர்கள்… டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட நண்பன் – இறுதியில் நடந்த விபரீதம் !

Advertiesment
பெண்ணுக்காக அடித்துக் கொண்ட இளைஞர்கள்… டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட நண்பன் – இறுதியில் நடந்த விபரீதம் !
, வியாழன், 19 மார்ச் 2020 (08:52 IST)
டிக்டாக்கில் நண்பர்கள் அடித்துக் கொண்ட வீடியோவை பதிவிட்ட நண்பனைக் கும்பலாக சேர்ந்து கொலை செய்து புதைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்வின் ஜோசப் என்ற இளைஞர். இவரைக் கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது தாய் அளித்த புகாரின் படி, போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது செல்போனை வைத்து போலிஸார் நடத்திய விசாரணையில் சந்தேகத்துக்கு இடமான நண்பர்களைப் பிடித்து விசாரித்ததில் ஜோசப்பை கொலை செய்து புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களது நண்பர்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது சம்மந்தமாக இரு தரப்பினருக்கு  இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

அது சம்மந்தமாக ஜோசப் டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதனால் கோபமான நண்பர்கள் அவரை தனியாக அழைத்துச் சென்று  குடிக்கவைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரைக் குழித்தோண்டி புதைத்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் போலீஸார் ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் எதிரொலி: திடீரென 144 தடை உத்தரவு போட்ட மாநில அரசு