Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நள்ளிரவில் லோடு வேன் ரேஸ்! – பரிதாபமாக பலியான இளைஞர்கள்!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 16 மார்ச் 2020 (10:56 IST)
ராணிப்பேட்டை அருகே லோடு வேனில் ரேஸ் நடத்திய விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே உள்ள ஆற்காட்டில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் லோடு ஏற்றி செல்ல பயன்படுத்தும் வேனை கொண்டு ரேஸ் நடத்தியுள்ளனர். சாலையில் மிக வேகமாக வேனில் சென்றபோது ஆஜிப்பேட்டை வளைவு சாலையில் நிலைத்தடுமாறிய வேன் சுவர் ஒன்றில் பயங்கரமாக மோதியது.

இதுகுறித்து அங்கிருந்த மக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்த போலீஸார் உடனடியாக அந்த இளைஞர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஒரு நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

லோடு வேனில் ரேஸ் நடத்த முயன்று இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரொனா தொற்றா ? வெளியானது முடிவுகள் !