Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’சிங்கம்’’ பட பாணியில் இரண்டு கார்கள் நடுவில் போஸ் கொடுத்த போலீஸ் அதிகாரி ...

Advertiesment
’’சிங்கம்’’  பட பாணியில்  இரண்டு கார்கள் நடுவில்  போஸ் கொடுத்த போலீஸ் அதிகாரி ...
, செவ்வாய், 12 மே 2020 (15:34 IST)
இந்தியாவில் உள்ள சினிமா பிரியர்களுக்கு  மிகவும் பரீட்சயமான ஒரு படம் சிங்கம் அத்தனை மொழிகளிலும் அது பட்டயக் கிளம்பி வசூலை வாரிக்குவித்தது. அந்தப்படத்தில் இரண்டு கார்களின் மேல் ஏறி நின்று கொண்டு நடிகர் அஜய் தேவ் கான் இரண்டு கால்களையும் விரித்து வைத்து நின்றபடி பயணம் செய்வார்.

இதேபோல் மத்திய பிரதேசத்தில் பணியில் இருந்த துணை ஆய்வாளர்  மனோஜ் யாதவ், தன்னை ஒரு ஹீரோவாக பாவித்துக் கொண்டு, இரண்டு கார்களுக்கு நடுவே நின்றபடி பயணம் செய்து. வீரசாகமுள்ள இந்த வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இது வைரலானது.

இந்த வீடியோ மேலதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது.  இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்துக்கு ஐஜி அனில்  உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற வீடியோக்கள்  இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும் என்பதால், மனோஜுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இதுபோல் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க சிரிக்கிற மாதிரி மக்களும் சிரிக்கணும்! – எடப்பாடியாருக்கு கமல்ஹாசன் நூதன வாழ்த்து!