Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு புரியல... ஏன் இப்படி இஷ்டத்துக்கு பேசுறாங்கன்னு - ஜோதிகாவின் பேச்சு குறித்து வரலட்சுமி ஆவேசம்!

Advertiesment
எனக்கு புரியல...  ஏன் இப்படி இஷ்டத்துக்கு பேசுறாங்கன்னு - ஜோதிகாவின் பேச்சு குறித்து வரலட்சுமி ஆவேசம்!
, திங்கள், 4 மே 2020 (09:31 IST)
மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்து சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டதாக நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக ஜோதிகாவை மட்டுமின்றி சிவகுமார் குடும்பத்தையே வறுத்தெடுத்து வந்தனர்.

ஜோதிகாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்தது. இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தைடைத்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜோதிகா பேசியதை குறித்து தெளிவான விளக்கம் அளித்ததுடன் தங்களுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே பிரபல இணையத்தள சேனல் ஒன்று நடிகை வரலக்ஷ்மியிடன் வீடியோ காலில் பேட்டி எடுத்தது அப்போது ஜோதிகாவின் தஞ்சை கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கருக்கு பதிலளித்த வரலக்ஷ்மி " ஜோதிகா, ஒரு மதம் சார்ந்த இடத்தை நன்றாக பராமரிக்கும் போது, உயிர்காக்கின்ற மருத்துவமனையை ஏன் கேர்லெஸ் ஆக விடுகிறோம் என கேட்டிருந்தார். ஆனால், அதை தெளிவாக புரிந்துகொள்ளாதவர்கள் ட்விஸ்ட் பண்ணி வேற மாதிரி கொண்டு சென்று பிரச்னையை கிளறி விடுகின்றனர்.. அது ஏன் என்று  எனக்கு புரியவில்லை. என கூறி ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவளித்து பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆத்தி.... மாட்டோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் கேக்க ஆரம்பிச்சுடுச்சே - புலம்பும் மணிமேலை!