தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை மக்களின் பசியாற்றிய நடிகர் சூர்யா!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை மக்களின் பசியாற்றிய நடிகர் சூர்யா!

Advertiesment
தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை மக்களின் பசியாற்றிய நடிகர் சூர்யா!
, செவ்வாய், 12 மே 2020 (08:10 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது. இதையடுத்து இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர். மேலும், அஜித், விஜய், ரஜினி , சூர்யா, தனுஷ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர் சூர்யா மதுரை அன்னவாசல் திட்டத்திற்கு  ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாக  எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர்,  ""ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டி பாப்பாவாக நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் - வைரலாகும் கியூட் போட்டோ!