தளபதி பிறந்தநாளில் சூர்யா பட அறிவிப்பு - விஜய்க்கு கொக்கி போடுகிறேனா? சுதா கொங்கரா விளக்கம்!

திங்கள், 4 மே 2020 (08:45 IST)
பிரபல இயக்குனர் சுதா கொங்கரா தற்போது சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதா கொங்கரா எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து " விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகும் என்ற ட்விட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி தலைப்பு செய்தியாக பேசப்பட்டது. இதனால் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது சுதா என கூறப்பட்டது. பின்னர் அந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்றும் அது வெறும் வதந்தி செய்தி எனவும் தகவல் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள இயக்குனர் சுதா கொங்கரா, ''நான் ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. நான் புதிய படத்தில் ஒப்பந்தாமானால், அதுகுறித்து நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். எனவே இப்படி பொய்யான தகவல்கள் வெளிவருவதில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருங்கள் என கூறி தனது அடுத்த படம் விஜய்யுடன் என்ற தகவலிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னர் சுதா கொங்கரா கூறிய கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என கூறி நிராகரித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை! பிரபல இயக்குனர் காட்டம்!