வியாபாரியை அடித்து மாம்பழங்களை கொள்ளையடித்த கும்பல் !

வெள்ளி, 22 மே 2020 (19:11 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது ஊரடங்கால் அனைத்து தொழில்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் நெருக்கடி மிகுந்த சாலையில் பழக்கடை வைத்து  வாடிக்கையாளர் வருகைக்காக காத்திருந்தார் ஒரு  பழ வியாபாரி.

ஆனால், அவரிடம்  பழம் வாங்க வந்த சிலர் அவருடன் சண்டையிட்டு அவரிடம் இருந்த பழங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

அதை தடுக்க வியாரி எவ்வளவோ முயன்றும் கூட சிலர் தங்களின் டூவீலரில் மாம்பழங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தன் தந்தையுடன் 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி சாதனை...