Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன் தந்தையுடன் 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி சாதனை...

தன் தந்தையுடன் 1,200 கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமி சாதனை...
, வெள்ளி, 22 மே 2020 (19:02 IST)
கொரோனாவால் இந்திரா முழுவதும் வரும் மே 31 ஆம் தேதிவரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  தன் தந்தையுடன் 1200கிமீ சைக்கிள் ஓட்டிய சிறுமியின் வாழ்க்கை மாறப் போகிறது.

கொரொனாவால் அழிவுகள் பெருமளவு ஏற்பட்டாலும்கூட அநாவசிய செலவுகல் இன்றி மக்கள் வாழ்க்கை வாழ ஓரளவு கற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் வெவ்வேறு இடங்களில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் , மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. இவர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார்.

இந்தச் சிறுமி தனது அப்பா மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் வசித்து வந்துள்ளார். தந்தை ஆட்டோ டிரைவராக இருந்ததால் சமீபகாலமாக வருமான இழந்து பெரும் சிரமத்து ஆளான நிலையில் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அதனால் அவர் ஓட்டி வந்த ஆட்டோவை அதன் உரிமையாளர் திரும்ப வாங்கிக் கொண்டார்.

இந்நிலையில் மோகன் அரியானாவில் இருந்து சுமார் 1200 கி.மீ தொலைவில் உள்ள பீகாருக்குச் சென்று அங்கு பிழைப்பைத் தேடிக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

ஆனால், ரயில், பேருந்து போக்குவரத்து அப்போது இல்லாததால் கையில் இருந்த பணத்தைக் கொண்டு ஒரு சைக்கிளை வாங்கி மகளிடம் தந்துள்ளார்.

ஜோதி குமார் தந்தையை சைக்கிளின் பின்னால் அமரச் செய்துவிட்டு  கடந்த 10 ஆம் தேதி அரியானா குர்கானில் இருந்து சைக்கிளை எடுத்தார். தொடர்ந்துஏழு நாட்கள்  இரவும் பகலும் சவாரிக்குப் பின்னர் கடந்த 16 ஆம் தேதி பீகாரி உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடம் சென்றைந்தார் ஜோதிகுமார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் ஆச்சர்யம் அடைந்தது.

இதுபற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் சொல்லும்போது, ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதைச் செய்திருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக உள்ளது. அந்த சிறுமியின் ஆற்றல்,வலிமை,உடல்வாகு இருக்கவேண்டும். நாங்கள் தேர்ந்தெடுக்கும் 8 அம்சங்களில் அவர் தேர்ச்சி பெற்றால் ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க  முடியும் நாங்கள் இளம் வீரர்களை தேர்வு செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15ஆயிரத்தை நெருங்கும் தமிழகம், 10ஆயிரத்தை நெருங்கும் சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்