Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டுவிட்டருக்கு பதிலாக இந்தியாவிலேயே ஒரு சமூக வலைத்தளம்: கங்கனா ரனாவத்

டுவிட்டருக்கு பதிலாக இந்தியாவிலேயே ஒரு சமூக வலைத்தளம்: கங்கனா ரனாவத்
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:35 IST)
சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நடிகை கங்கனா கூறியதாவது:
 
தேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சொன்னதாக தானும், தன் சகோதரியும் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகவும், தனது சகோதரி, மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறினார் என்றும், தானும், நாட்டில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் சுகாதாரத்துறை அதிகாரிகளையோ, காவல்துறையையோ தாக்குவதாகச் சொல்லவில்லை என்றும் கங்கணா கூறியுள்ளார்.
 
மேலும் இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாதி என்று அழைக்க டுவிட்டர் அனுமதிக்கிறது என்றும், ஆனால் உண்மையான தீவிரவாதிகளை அப்படி அழைக்க விடாமல் தடுக்கிறது என்றும்,  அப்படிப்பட்ட டுவிட்டர் தளத்தை இந்தியாவில் முடக்கிவிட்டு, இந்தியாவுக்கு இஎன சொந்தமான ஒரு சமூக வலைதளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கங்கணா கூறியுள்ளார்.
 
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதற்கு தப்லிகி ஜமாத் அமைப்புதான் காரணம் என்று கூறிய மல்யுத்த வீராங்கனை பபிதா குமாரிக்கு அச்சுறுத்தல் வருவதாகவும், அவரைக் காக்க வேண்டும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊடங்கு நேரத்தில் அஜித், சிம்பு படங்களை பார்க்க வேண்டாம்: கவுதம் மேனன்