Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

16 நாள் கைக்குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு

Advertiesment
ஒடிசா
, ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (10:27 IST)
ஒடிசாவில் பிறந்து 16 நாளே ஆன கைக்குழந்தையை குரங்கு ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் குரங்குகள் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் குரங்குகளால் ஏற்படும் பிரச்சனையும் அதிகம். மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியும், தூக்கிச் செல்வதுமாய் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. சில சமயம் அது மக்களை தாக்கவும் செய்கிறது.
webdunia
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் பிறந்து 16 நாளே ஆன குழந்தை ஒன்று வீட்டில் தனது அம்மாவுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிற்குள் புகுந்த குரங்கு குழந்தையை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டது.
 
இதனையடுத்து தீயணைப்பு துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பான், ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்க அவகாசம் - மத்திய நிதி அமைச்சகம்