Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரிசுப் பொருள் வெடித்ததில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

Advertiesment
பரிசுப் பொருள் வெடித்ததில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி
, சனி, 24 பிப்ரவரி 2018 (09:50 IST)
ஒடிசாவில் திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஒடிசா மாநிலம் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்று கடந்த 21-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியினர் நேற்று பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பரிசு பொருள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. இதில் புது மாப்பிள்ளை சேகர் சாஹூ, மணமகள் ரீமா மற்றும் சேகரின் பாட்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மற்றும் அவரது பாட்ட பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
webdunia
பல கனவுகளோடு தனது மன வாழ்க்கையை துவங்க நினைத்திருந்த புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம்  அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியால் விராத் கோஹ்லிக்கு சிக்கலா?