Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பான், ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்க அவகாசம் - மத்திய நிதி அமைச்சகம்

Advertiesment
பான், ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்க அவகாசம் - மத்திய நிதி அமைச்சகம்
, ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (09:31 IST)
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அனைத்து வாடிக்கையாளர்களும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் பான், ஆதாரை இணைக்க அவகாசமும் அளித்து இருந்தது. மத்திய அரசின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 13-ந்தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடிகர்-நடிகைகள் போராட்டம் நடத்த முடிவு