Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் மீது செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு(வைரலாகும் வீடியோ காட்சி)

Advertiesment
முதலமைச்சர் மீது செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு(வைரலாகும் வீடியோ காட்சி)
, புதன், 21 பிப்ரவரி 2018 (12:06 IST)
ஒடிசா மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமச்சர் மீது மர்ம நபர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கூட்டங்களில் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் மீது காலணிகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
 
ஒடிசா கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் பிஜு ஜனதாதளத்தின் தலைவராகவும் இருக்கும் நவீன் பட்நாயக் மீது ஒரு பெண் முட்டைகளை வீசிய பரபரப்பு சம்பவம் அடங்குவதற்கு உள்ளேயே,  இடைத்தேர்தலுக்காக பிஜப்பூர் சட்டசபை தொகுதி  பிஜு ஜனதாதளம் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் மீது வாலிபர் ஒருவர் திடீரென தனது 2 ஷூக்களையும் கழட்டி முதல்வரை நோக்கி வீசினார். நவீன் பட்நாயக்கின் பாதுகாவலர் அதனை தடுத்தார். அதிர்ஷ்டவசமாக முதல்வருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
webdunia
இதையடுத்து பாதுகாவலர்கள், நவீன் பட்நாயக்கை பத்திரமாக காருக்கு அழைத்து சென்றனர். ஷூ வீசிய வாலிபரை பிஜு ஜனதாதளத்தினர் அடித்து உதைத்தனர். போலீஸார் அவர்மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ABP ANANDA

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை - ஜெயக்குமார் பேட்டி