கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

Bala
சனி, 8 நவம்பர் 2025 (17:01 IST)
சிறுமிகளும், சிறுவர்களும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நாடெங்கும் அவ்வப்போது அரங்கேறி அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்துவதுண்டு. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளியின் மாடியிலிருந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி மேலே இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் அது போன்ற சம்பவம் ராஜஸ்தானிலும் தற்போது நடந்திருக்கிறது.
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 வயது சிறுமி படித்து படித்து வந்தார். அந்த சிறுமியை சக மாணவர்கள் தொடர்ந்து சிறுமைப்படுத்தி கிண்டலடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி பலமுறை ஆசிரியர்களிடம் முறையிட்டும் அவர்கள் எதையும் கேட்கவில்லை.
 
சம்பவம் நடந்த அன்றும் அந்த சிறுமி ஆசிரியரிடம் சென்று இது தொடர்பாக 4 முறை புகார் அளித்திருக்கிறார். ஆனால் ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்த போது ‘கோ எட்’ என்றால் அப்படித்தான் இருக்கும் என்று அவர் சொல்லியதாக தெரிகிறது.
 
தொடர் கேலி, கிண்டல்களை பொறுக்க முடியாத அந்த சிறுமி கடந்த 1ம் தேதி பள்லியின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதையடுத்து அந்த ஆசிரியர்கள் மீதும், தலைமை ஆசிரியர்க மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர்களும், உறவினர்களும் புகார் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments