இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் மத்திய அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 23 பேர் புராண வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் இதனை அடுத்து டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து ‘டெல்லி மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுவதில்லை என்றும், உடனடியாக பிரதமரின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு உத்தரவை கடைபிடித்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்
மேலும் பிற மாநிலங்களில் இருந்து வேலைநிமித்தம் டெல்லி வந்த பொதுமக்கள் யாரும் சொந்த மாநிலத்திற்கு இந்த நேரத்தில் செல்ல வேண்டாம் என்றும் இப்பொழுது எங்கே இருக்கிறார்களோ அதே இடத்தில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார் ஆனால் டெல்லியில் இருந்து அண்டை மாநில மக்கள் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து சென்று கொண்டிருப்பதால் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது